
ஆட்டுக்கால் குழம்பு
அசைவம்மென்மையாகும் வரை வேகவைத்த ஆட்டுக்காலை மிளகாய், தேங்காய், மிளகு மசாலாவில் முடிக்கப்படும்.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 60 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 75 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்குழம்பு
பொருட்கள்
- 4 ஆட்டுக்கால்
- 11 மிளகாய் வற்றல்
- 4 தேங்காய் சில்
- 3 தேக்கரண்டி சீரகம்
- 10 வெங்காயம்
- சிறிய துண்டு இஞ்சி
- 1 தேக்கரண்டி மிளகு
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- 2 தேக்கரண்டி எண்ணெய்
செய்முறை
- துண்டு செய்த கால்களுடன் வெங்காயம், இஞ்சி, எண்ணெய், மஞ்சள் தூள் சிறிது தண்ணீர் கலந்த நன்றாக வேக வைக்க வேண்டும். கால் வேக நேரம் ஆகும். குக்கரில் 1 மணி நேரம் ஆகும். இளமையான ஆட்டின் கால் என்றால் 1 மணி நேரம் ஆகும். வற்றல், தேங்காய், சீரகம் மிளகு, அரைத்துவேக வைத்த காலில் கலந்த உப்புப்போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இட்லி, தோசைக்கு சேர்த்துச் சாப்பிடலாம்.