ஜிஞ்சர் சிக்கன்
ஜிஞ்சர் சிக்கன்
வகைகள்கறி
பொருட்கள்
- 500 கிராம் நாட்டுக் கோழிக்கறி
- 3 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 100 மில்லி எண்ணெய்
- 1 ஸ்பூன் வினிகர்
- 100 கிராம் இஞ்சி சாறு
- 3 ஸ்பூன் மஞ்சள்தூள்
- சிறிதளவு உப்பு, கறிவேப்பிலை
செய்முறை
- கோழி கறியை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும். இஞ்சியை நீக்கி சாறு எடுத்து மஞ்சள்தூள், உப்பு, வினிகர், மிளகாய்தூள் சேர்த்து கலக்கி கோழிக்கறியை போட்டு நன்றாக பிசையவும். கறிமசால் பொடியை போட்டு 1 மணி நேரம் மூடி வைக்கவும். பாதி அளவு கறி வெந்ததும் திறந்து கிளறவும். சிறிது எண்ணெய் சேர்த்து பொன்னிறமாகும் வரை கிளறவும். கறிவேப்பிலை சேர்க்கவும். சுவையாக இருக்கும்.