
கெருகு வடை
சைவம்நெய்யுடன் வேகவைத்த அரிசி மாவை எள், வேர்க்கடலை, ஊறவைத்த பருப்புகளுடன் பிசைந்து மெல்லிதாக பொரிக்கப்படும் கெருகு வடை.
- தயாரிப்பு நேரம்
- 30 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 45 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்வடை சமையல் குறிப்புகள்
பொருட்கள்
- 1 கப் கழுவி காயவைத்த அரிசி மாவு (தயாரிப்பு முறை குறிப்பில்)
- 1 கப் தண்ணீர்
- 2 டீஸ்பூன் நெய்
- 1 1/2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
- 1 டேபிள் ஸ்பூன் கரகரப்பாக பொடி செய்த வேர்க்கடலை
- தேவைக்கேற்ப உப்பு
- 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி
- 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
- 2 டீஸ்பூன் எள்
- 2 டீஸ்பூன் பயத்தம் பருப்பு (தண்ணீரில் ஊறவைக்கவும்)
- 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு (தண்ணீரில் ஊறவைக்கவும்)
செய்முறை
- தண்ணீரை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு உப்பும், நெய்யும் சேர்த்து சூடாக்கவும்.
- தண்ணீர் கொதிக்கும்போது மாவை அப்படியே மத்தியில் கொட்டி உடனே ஸ்டவ்வை அணைத்து விடவும்.
- இறக்கி வைத்து கரண்டியில் நன்றாகக் கலக்கவும்.
- கை பொறுக்கும் சூடு வந்ததும் உருக்கிய நெய் மற்றும் எள், வேர்க்கடலைப் பொடி, ஊறவைத்த பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.
- தண்ணீர் பற்றாவிடில் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும்.
- எலுமிச்சையளவு உருண்டைகள் செய்து ஒரு பாலீதீன் பேப்பரின் மேல் மெலிதாகத் தட்டி எண்ணெய் கொள்ளுமளவிற்குப் போட்டு கரகரப்பாக பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.
- அரிசி மாவு செய்முறை: பச்சரிசியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, தண்ணீரை நன்றாக வடித்து ஒரு துணியின் மேல் பரப்பி நிழலில் காய வைக்கவும். ஈரம் போனபின் மாவு மிஷினில் பொடி செய்து வரவும். மறுபடியும் 1 அல்லது 2 நாள் நிழலில் காயவைத்து டப்பாவில் பத்திரப்படுத்தவும்.