
பூண்டு சட்னி (சாண்ட்விச்சிற்கு)
சைவம்வதக்கிய பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகத்தை புளியுடன் அரைத்து வெண்ணெய் தடவிய சாண்ட்விச் ரொட்டியின் மேல் பூச தயாரிக்கப்படும் சட்னி.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 10 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 25 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்சட்னி
பொருட்கள்
- 25 பற்கள் உரித்த பூண்டு
- 10 காய்ந்த மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- நெல்லிக்காயளவு புளி
- தேவைக்கேற்ப உப்பு
- 1/4 கப் உதிர்த்த கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் எண்ணெய் (தாளிக்க)
- 1/4 டீஸ்பூன் கடுகு (தாளிக்க)
செய்முறை
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி சிகப்பு மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு மற்றும் சீரகத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- ஆறிய பிறகு உப்பு, ஊற வைத்த புளி சேர்த்து நைசான சட்னியாக அரைக்கவும்.
- சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சட்னியுடன் கலக்கவும்.
- வெண்ணெய் பூசிய ரொட்டித் துண்டின் மேல்பூசி சாண்ட்விட்ச் செய்ய உபயோகப்படுத்தவும்.