மீன் ரோஸ்டின் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

மீன் ரோஸ்ட்

அசைவம்

மிளகு, தனியா, சீரக தூள் கலவையில் ஊறவைத்த மீனை எண்ணெயில் பொரிக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
25 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்கறி

பொருட்கள்

  • 500 கிராம் மீன்
  • 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
  • 1 தேக்கரண்டி தனியா தூள்
  • 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • 300 கிராம் நல்லெண்ணெய் (பொரிக்க)
  • 2 முட்டை (விரும்பினால்)
  • வெங்காயம், கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு (பரிமாற விரும்பினால்)

செய்முறை

  1. 500 கிராம் மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 1 தேக்கரண்டி மிளகுத்தூள், 1 தேக்கரண்டி தனியா தூள், 1 தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான உப்புத்தூள் இவற்றை சிறிதளவு தண்ணீரில் கலந்து மீன் துண்டுகள் மீது தடவி 30 நிமிடங்கள் ஊறவிடவும். அதன்பின் வாணலியில் 300 கிராம் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் மீன் துண்டுகளைப் போட்டு பொறித்து எடுத்து உபயோகிக்கவும். 2 முட்டைகளை அடித்து மீன் துண்டுகளை அதில் நனைத்தும் வறுக்கலாம் (optional). நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழைகளை எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.