
காய்கறி, பழக்கலவை சாட்
சைவம்வாழைப்பழம், ஆரஞ்சு, தக்காளி, உருளைக்கிழங்கு, கொய்யாவை எலுமிச்சை ரசம், சாட் மசாலாவுடன் கலந்து குளிர வைத்து பரிமாறப்படும் புதுமையான சாட்.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 20 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்சாட் வகைகள்
பொருட்கள்
- 2 (அ) 3 வாழைப்பழம்
- 1 (அ) 2 கமலா ஆரஞ்சு
- 2 தக்காளி
- 2 வேக வைத்த உருளைக்கிழங்கு
- 1 கொய்யாப் பழம் (அ) மாம்பழம்
- 2 எலுமிச்சம் பழம்
- 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித் தழை
- உப்பு, மிளகுப் பொடி (தேவைக்கேற்ப)
- சாட் மசாலா பொடி (தேவைக்கேற்ப)
செய்முறை
- காய்கறிகளையும், பழங்களையும் ஒரே அளவு துண்டங்களாக்கவும்.
- உப்பு, மிளகுத் தூள் சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து, சாட் மசாலா பொடி தூவி லேசாக் குலுக்கி விடவும்.
- மூடியால் மூடி 1/2 மணி நேரம் ப்ரிஜ்ஜில் வைக்கவும்.
- பரிமாறுமுன் ஒரு அலங்காரமான கிண்ணத்தில் போட்டு மேலே கொத்தமல்லித் தழை தூவி கடைந்த பாலேடு அலங்கரித்து பரிமாறவும்.