மீன் கட்லெட்டின் புகைப்படம், சட்னியுடன் பரிமாறப்பட்டுள்ளது

மீன் கட்லெட்

அசைவம்

வேகவைத்த மீனை வதக்கிய வெங்காயத்துடன் கலந்து உருண்டை பிடித்து, முட்டை-பிரட் தூளில் தோய்த்து பொரிக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
25 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
கடினம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 1/2 கிலோ சதை அதிகமுள்ள மீன்
  • 1/4 கிலோ பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
  • 1 முட்டை
  • பிரட் தூள் (தேவையானது)
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகுதூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 கொத்த மல்லி இலை (சிறிய கட்டு)
  • 6 பச்சை மிளகாய்
  • எண்ணெய் (பொரிக்க)
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  1. மீனில் மஞ்சள்தூள் சேர்த்து வேக விட்டு, முள், தோல் நீக்கி தூளாக்கிக் கொள்ளவும். இதில் மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கியதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும். இதில் மீன் கலவையை சேர்த்து எலுமிச்சை சாறு ஊற்றி கலக்கி நீள வாக்கில் உருண்டை பிடித்துக் கொள்ளவும். பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டை ஊற்றி அதில் உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் உருண்டைகளை நனைத்து பின் பிரட் தூளில் புரட்டி எண்ணெயில் பொன்நிறமாக பொரித்து எடுக்கவும்.