சாப்ஸ் மீனின் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

சாப்ஸ் மீன்

அசைவம்

மீன் துண்டுகளை கடுகு, சீரக தாளிப்பில் வேகவைத்து சோயா சாஸுடன் முடிக்கப்படும் எளிய உணவு.

தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
30 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்கறி

பொருட்கள்

  • 100 மி.லி நல்லெண்ணெய்
  • 2 ஸ்பூன் கடுகு, சீரகம்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 6 எண்ணம் மீன் துண்டுகள்
  • 2 ஸ்பூன் மிளகுத்தூள்
  • சிறிதளவு சோயா சாஸ்

செய்முறை

  1. முள் அதிகம் இல்லாத மீன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு வதக்கவும். மீன், உப்பு, மிளகுத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி குறைந்த தீயில் வேக வைக்கவும். மீன் வெந்து பக்குவமானதும் சோயா சாஸ் சேர்த்து மீனை மெதுவாக பரப்பி எடுத்து இறக்கி மூடி வைக்கவும். ஆறியதும் உண்ணலாம்.