மீன் பஜ்ஜியின் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

மீன் பஜ்ஜி

அசைவம்

முழு மீன்களை பூண்டு கலந்த பஜ்ஜி மாவில் தோய்த்து பொன்நிறமாக பொரிக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
5
கடினத்தன்மை
எளிது
வகைகள்பஜ்ஜி

பொருட்கள்

  • 5 எண்ணம் பெரிய மீன்
  • 200 கிராம் எண்ணெய்
  • 200 கிராம் காக் பஜ்ஜிமாவு
  • சிறிதளவு கறிமசால் பொடி
  • சிறிதளவு உப்பு, பூண்டு

செய்முறை

  1. மீன்களை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளவும். பஜ்ஜி மாவுடன் பூண்டு, சிறிது உப்பு, கறிமசால் பொடி சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெயை ஊற்றி நன்கு சூடானதும், மீனை எடுத்து ஏற்கனவே கரைத்து வைத்த பஜ்ஜிமாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்து இருபக்கமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும். மீன் பஜ்ஜி ரெடி. மிகவும் சுவையாக இருக்கும்.