ஃபிங்கர் ஃபிஷின் புகைப்படம், சட்னியுடன் பரிமாறப்பட்டுள்ளது

ஃபிங்கர் ஃபிஷ்

அசைவம்

விரல் அளவு வெட்டிய மீன் துண்டுகளை இஞ்சி பூண்டு, முட்டை, சோளமாவில் ஊறவைத்து பொரிக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
25 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 1/2 கிலோ வஞ்சர மீன் (முள், தோல் நீக்கி விரல் சைஸ்க்கு வெட்டி வாங்கவும்)
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் சோளமாவு
  • 2 முட்டை
  • 2 டீஸ்பூன் எலுமிச்சைசாறு
  • எண்ணெய் (பொரிக்க)
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  1. மீனை சுத்தம் செய்து மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மீனை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.