
ஃபிங்கர் சிப்ஸ்
சைவம்விரல் வடிவில் நறுக்கிய உருளைக்கிழங்கை ஸ்டார்ச் நீங்கும்வரை கழுவி, உலர்த்தி, லேசான பொன்னிறமாக பொரிக்கப்படும் ஃபிங்கர் சிப்ஸ்.
- தயாரிப்பு நேரம்
- 25 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 45 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்சிற்றுண்டி
பொருட்கள்
- 1/2 கிலோ உருளைக்கிழங்கு
- தேவைக்கேற்ப உப்பு
- 1 டீஸ்பூன் மிளகுப் பொடி (அ) மிளகாய்ப் பொடி
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
செய்முறை
- உருளைக்கிழங்கை நீளமான சைசில் பொறுக்கி எடுத்து தோல் சீவவும்.
- விரல்களைப் போல பருமனுள்ள துண்டங்களாக வெட்டி உப்பு சேர்த்த நீரில் போடவும்.
- எல்லா உருளைக்கிழங்குகளையும் அரிந்தபின் தண்ணீரில் மூன்று அல்லது 4 முறை கழுவவும் (அதிலுள்ள ஸ்டார்ச் குறைந்து தண்ணீர் தெளிவாக இருக்கும்வரை கழுவலாம்).
- தண்ணீரை நன்கு வடித்து விட்டு ஒரு துணியின் மேல் பரப்பி ஈரம் உறிஞ்சப்பட்டவுடன் சூடான எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்தெடுக்கவும் (லேசான பொன்னிறம் வரும்வரை).
- பொரித்தபின் எண்ணெயை நன்றாக வடித்துவிட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.