எண்ணெய் கத்தரிக்காய்

வகைகள்கறி

பொருட்கள்

  • 1/4 கிலோ பிஞ்சு கத்தரிக்காய் (சிறியதாக, ஒரே அளவில்)
  • அரைத்த மசால்
  • உப்பு
  • மஞ்சள்
  • 4 கரண்டி எண்ணெய்
  • கடுகு, உளுந்தம்பருப்பு
  • 25 கிராம் வெங்காயம் (வெட்டியது)
  • கருவேப்பிலை

செய்முறை

  1. ¼ கிலோ பிஞ்சு கத்தரிக்காய் சிறியதாக ஒரே அளவில் வாங்கி முழுவதும் வெட்டாமல் நாலுபாகமாக கீறி அரைத்த மசால், உப்பு, மஞ்சள் கலவையை உள்ளே வைத்து சிறிது நேரம் வைத்திருந்து, வாணலியில் 4 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு வெடித்ததும் 25 கிராம் வெட்டிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கி கத்தரிக்காயையும் போட்டு சிறு தணலில் மூடி வைத்து வதக்கவும். நன்றாக சுருள சிவந்ததும் இறக்கவும்.