முட்டை பொரியல்

வகைகள்பொரியல்

பொருட்கள்

  • 2 முட்டை
  • ½ கிலோ வெண்டைக்காய்
  • 100 கிராம் சிறிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் தலா கடுகு, உளுந்தம் பருப்பு
  • ½ டீஸ்பூன் மிளகு, சீரகத்தூள்
  • தேவையானது உப்பு
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  1. முட்டையை உடைத்து அதனுடன் மிளகு, சீரக, மஞ்சள்தூள் லேசாக உப்பு சேர்த்து அடித்து வைக்கவும். வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், ப.மிளகாய் வெண்டைக்காய், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து சுருள வதக்கவும். அடுத்து, முட்டைக்கலவையை இதில் ஊற்றி நன்றாக கிளறி இறக்கி விடவும். சூடாக பரிமாறவும்.