
பான் கேக்
அசைவம்நுரைக்க அடித்த முட்டையுடன் மைதா, சீனி கலந்து தோசைப் போல் மெல்லிய வட்டமாக நெய்யில் சுடப்படும் இனிப்பு பான்கேக்.
- தயாரிப்பு நேரம்
- 10 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 25 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்இனிப்பு
பொருட்கள்
- 300 மி.லி. மைதா மாவு
- ¼ தேக்கரண்டி சோடா உப்பு
- 150 கிராம் சீனி
- 2 முட்டை
- தேவைக்கேற்ப நெய் அல்லது டால்டா
செய்முறை
- முட்டைகளை நன்றாக நுரை பொங்க அடித்து மைதா, சீனி, தண்ணீர், சோடா உப்பு இவைகளை கலந்து தோசை மாவு போல் தயார் செய்யவும்.
- தோசைச் சட்டியில் கொஞ்சம் நெய் விட்டு மாவு ஒரு கரண்டி விட்டு தோசை போல் விரித்து, பின் திருப்பி விட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும். இளந்தீயாக இருப்பது நல்லது.