முட்டை ஆம்லெட்

வகைகள்காலை உணவு

பொருட்கள்

  • 4 முட்டை
  • 50 கிராம் சிறிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • ½ டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன் தலா மிளகு, சீரகத்தூள்

செய்முறை

  1. முட்டைகளை உடைத்து அடித்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம், ப. மிளகாய் இவற்றை அம்மியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். அடித்து வைத்துள்ள முட்டையில், மஞ்சள், மிளகு, சீரகதூள், வெங்காயம், ப. மிளகாய் விழுது, உப்பு முதலியவற்றை நன்றாக கலந்து தோசை கல்லில் சிறுசிறு வட்டங்களாக ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும். சூடாக பரிமாறவும்.