முட்டைக் குழம்பு

வகைகள்குழம்பு

பொருட்கள்

  • 4 முட்டை
  • 3 டம்ளர் தேங்காய் பால்
  • 4 ப.மிளகாய்
  • 100 கிராம் வெங்காயம்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 4 பல் பூண்டு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • தேவையான அளவு உப்பு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  1. முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். மஞ்சள்தூள் நறுக்கிய மிளகாய், பூண்டு சேர்த்து கிளறி 1 டம்ளர் தேங்காய் பால் ஊற்றவும். இக்கலவையை நன்றாக கொதிக்க விடவும். இதனுடன் முட்டை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, மீதுள்ள தேங்காய் பால், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஒரு கொதியில் இறக்கி விடவும்.