முட்டைத் தோசை-இன் புகைப்படம், தேங்காய் சட்னியுடன் பரிமாறப்பட்டுள்ளது

முட்டைத் தோசை

அசைவம்

தோசை மாவின் மீது அடித்த முட்டையை பரப்பி, வெங்காயம் தூவி சுடப்படும் புரதம் நிறைந்த தோசை.

தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
25 நிமிடங்கள்
பேருக்கு
3
கடினத்தன்மை
எளிது
வகைகள்தோசை வகைகள்

பொருட்கள்

  • தோசை மாவு (3 தோசைக்கு தேவையான அளவு)
  • 1 முட்டை (நன்றாக நுரை பொங்க அடித்தது)
  • வெங்காயம் (துருவியது, விரும்பினால்)
  • தேவைக்கேற்ப உப்பு
  • தேவைக்கேற்ப மிளகுத்தூள்

செய்முறை

  1. 3 தோசைக்கு உரிய மாவுடன் ஒரு முட்டையை நன்றாக நுரை பொங்க அடித்து சேர்த்து தோசை சுடலாம். இத்துடன் வெங்காயம் தூவி வெங்காய முட்டை தோசை சுடலாம்.
  2. அல்லது, தோசை மாவை நன்றாக விரித்து அதன் மீது கலக்கி அடித்த முட்டை ஒன்றை தோசை மீது சுற்றி வர பரப்பிவிட்டு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
  3. ரவை தோசை மாவை விரித்து ஊற்றி அதன் மீது உப்பு, மிளகுத்தூள் கலந்து அடித்த முட்டையை பரவலாக ஊற்றி இட்லிப்பானை மூடியால் மூடி, வேக வைத்து திருப்பிப் போடாமல் மடித்து எடுக்கவும்.