முட்டை, காலிபிளவர் ஃபிரை
முட்டை, காலிபிளவர் ஃபிரை
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 1 காலிபிளவர்
- 3 முட்டை
- ½ டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள்
- ½ டீஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 டீஸ்பூன் மிளகு, சீரகத்தூள்
- 2 பச்சை மிளகாய்
- ½ டேபிள்ஸ்பூன் தனியாதூள்
- பொரிக்க எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி லேசாக உப்பு சேர்த்து முக்கால் வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து, நன்றாக அடித்துக் கொள்ளவும். இதில் மிளகாய், தனியா, மஞ்சள்தூள், மிளகு சீரகதூள், உப்பு, அரைத்த ப.மிளகாய் விழுது முதலியவற்றை போட்டு நன்றாக கலக்கி வேக வைத்த காலிபிளவரை ஒவ்வொன்றாக இந்த கலவையில் முக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.