முட்டை பிரட் ரோஸ்ட்

வகைகள்காலை உணவு

பொருட்கள்

  • 2 முட்டை
  • சிறிதளவு வெங்காயம், இஞ்சி
  • சிறிதளவு மிளகுத்தூள்
  • 1 பாக்கெட் பிரட்
  • 200 மி.லி பால்
  • சிறிதளவு பச்சை மிளகாய்
  • சிறிதளவு உப்பு, மஞ்சள்பொடி

செய்முறை

  1. முதலில் மசாலா பொருட்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவில் சிறிது உப்பு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். பிறகு பாலை கலக்கி கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி பிரட்டை முட்டைக் கலவையில் தேய்த்து எடுத்து தோசைக் கல்லில் போடவும். ஒரு பக்கம் சிவந்ததும் மறுபக்கமும் சிவக்க எடுக்க வேண்டும். முட்டை பிரட் ரோஸ்ட் ரெடி. இது சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்து மிகுந்தது.