முட்டை பிரியாணி பொரியல்

வகைகள்பொரியல்

பொருட்கள்

  • 8 முட்டை
  • பெரியவெங்காயம்
  • 2 உருளைக்கிழங்கு
  • தேவையான அளவு உப்பு
  • 10 பச்சை மிளகாய்
  • 150 கிராம் பட்டாணி

செய்முறை

  1. 8 முட்டைகளை, தேவையான உப்பு தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். 3 பெரிய வெங்காயம், பச்சை மிளகாய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்குகளையும் நறுக்கிக்கொள்ளவும். 150 கிராம் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பச்சைப்பட்டாணி கிடைக்காதபோது உலர்ந்த பட்டாணியை பயன்படுத்தலாம். அடித்து வைத்துள்ள முட்டையில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்களைக் கலந்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி முட்டைக் கலவையை ஆம்லெட்டுகள் செய்து கொள்ளவும். இவற்றை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். சிறிதளவு கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் 6 தேக்கரண்டி ஊற்றி, 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, இத்துடன் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும். உருளைக்கிழங்கு வெந்த பின் பட்டாணியைச் சேர்த்து, இத்துடன் முட்டைத் துண்டுகளையும் போட்டு கிளறவும். 5 நிமிடங்கள் கிளறிய பின் நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைப் போட்டு இறக்கவும்.