முட்டையும் காய்கறியும்
முட்டையும் காய்கறியும்
வகைகள்கறி
பொருட்கள்
- 6 முட்டை
- சிறிது இஞ்சி
- 5 வற்றல்
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி மல்லி
- 200 கிராம் பட்டாணி
- 200 மில்லி கெட்டி தேங்காய்ப்பால்
- 3 பல் பூண்டு
- 8 மிளகாய்
- 10 வெங்காயம்
- ¼ கிலோ உருளைக்கிழங்கு
- 2 தேக்கரண்டி கசகசா
- 6 முந்திரிப்பருப்பு
- 3 கரண்டி நல்லெண்ணெய்
- தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள்
செய்முறை
- முறை 1: முட்டையை வேக வைத்து உரித்து இரண்டாக வெட்டி வாயகன்ற பாத்திரத்தில் வைக்கவும். பட்டாணியை அவிக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து நறுக்கி வைக்கவும். மசால் சாமான்களை வறுத்து, கசகசா, முந்திரிபருப்புடன் அரைத்து வைக்கவும். இரும்புச் சட்டியில் எண்ணெய் ஊற்றி பொடியாக வெட்டிய வெங்காயம் மிளகாய், இஞ்சி, பூண்டை நன்றாக வதக்கி தேங்காய்ப்பாலில் அரைத்த மசாலைக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு குழம்பை கொதிக்கவிடவும். பின் பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்க்கவும். குழம்பு வற்றியதும் தயாராக வைத்திருக்கும் முட்டையின் மேல் ஊற்றி மல்லி இலை தூவவும். முறை 2: முன்பு கூறியபடி குழம்பு தயார் செய்து கொண்டு, முட்டையை நன்றாக அடித்து சிறிது நெய்யில் உதிரியாக கிளறி குழம்புடன் இறக்கும்போது சேர்க்கவும். காய்கறி சேர்க்கமாலும். இதே முட்டையில் வைக்கலாம். அப்படிச் செய்யும் போது உப்பு கொஞ்சம் குறைத்துக் கொள்ளவும். இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். குறிப்பு: இட்லி தோசைக்கு வைக்க வேண்டுமானால் முட்டையை சிறுதுண்டுகளாக வெட்டவும். காய்கறி இல்லாமலும் தயாரிக்கலாம்.