வறட்டுக்கறியின் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

வறட்டுக்கறி

அசைவம்

வறுத்த மசாலாவில் ஆட்டுக்கறியை அடர்த்தியாகவும் கறியில் ஒட்டும் வகையிலும் வேகவைக்கப்படும் காரமான கறி.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
40 நிமிடங்கள்
மொத்த நேரம்
60 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்கறி

பொருட்கள்

  • 1 கிலோ ஆட்டுக்கறி
  • 30 சிகப்பு மிளகாய்
  • 2 மேஜைக்கரண்டி மல்லி (தனியா)
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 4 பெரியவெங்காயம்

செய்முறை

  1. 1 கிலோ ஆட்டுக்கறியை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 30 சிகப்பு மிளகாய்கள், 2 மேஜைக்கரண்டி மல்லி (தனியா) 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி மிளகு இவற்றை அரைத்துக்கொள்ளவும். 4 பெரியவெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். துண்டுகள் செய்த கறியுடன் அரைத்த மசாலா, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் 200 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிக்கலவை நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். கறி வெந்த பின் எலுமிச்சையளவு வெண்ணெயை போடவும். மசாலா கறியுடன் நன்கு கலந்து கெட்டியானதும் எண்ணை மிதக்கும். தொடர்ந்து சில நிமிடங்கள் கிளறிய பின் இறக்கவும்.