
முருங்கைக்காய் வடை
சைவம்வேகவைத்த முருங்கைக்காய் விழுது, பூண்டு, வெங்காயத்துடன் அரைத்த கடலைப்பருப்பை மசால் வடை போல பொரிக்கப்படும் முருங்கைக்காய் வடை.
- தயாரிப்பு நேரம்
- 25 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 40 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்வடை சமையல் குறிப்புகள்
பொருட்கள்
- 1 கப் கடலைப்பருப்பு
- 1 கப் பொட்டுக்கடலை
- 5 முருங்கைக்காய்
- 2 பெரிய வெங்காயம்
- 3 (அ) 4 சிறிய வெங்காயம்
- 10 (அ) 12 பச்சை மிளகாய்
- 2 பல்லு பூண்டு
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- தேவைக்கேற்ப உப்பு
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
செய்முறை
- கடலைப் பருப்பை தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- முருங்கைக்காயை வேகவைத்து உள்ளே உள்ள விழுதை வழித்தெடுக்கவும்.
- ஊறிய பருப்போடு பொட்டுக்கடலை சேர்த்து அரைக்கவும்.
- பாதியளவு அரைபட்டவுடன், இடித்த பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் முருங்கைக்காய் விழுது, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
- கடைசியில் சோம்பு, பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து கலக்கவும்.
- மசால் வடையைப் போல தட்டி எண்ணெயில் பொரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.
- மாற்று செய்முறை -- வாழைப்பூ வடை: வாழைப் பூவின் மத்தியில் உள்ள மஞ்சள் மகரந்தக் காம்பை எடுத்துவிட்டு பூவை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஆவியில் வேகவைக்கவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வடை செய்முறையில் முருங்கைக்காய்க்குப் பதில் இந்த வாழைப்பூவை சேர்த்து அரைத்து வடை சுடவும்.