டபுள் பீன்ஸ் ரிசோல்ஸ்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

டபுள் பீன்ஸ் ரிசோல்ஸ்

சைவம்

ஊற வைத்து கரகரப்பாக அரைத்த டபுள் பீன்ஸை வெங்காயம், வெங்காயத் தாள், மசாலாவுடன் கலந்து உருண்டையாக்கி பொரிக்கப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்கட்லெட் வகைகள்

பொருட்கள்

  • 1 கப் அகலமான வெள்ளை பீன்ஸ் (Double Beans)
  • 1/2 கப் நறுக்கிய வெங்காயத்தாள் மற்றும் வெங்காயம்
  • தேவையான அளவு உப்பு
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை
  • 1/4 டீஸ்பூன் தனியா சீரகப் பொடி
  • எண்ணெய் (தேவையான அளவு)
  • 6 பச்சை மிளகாய் (அரைக்க)
  • 1 பல்லு பூண்டு (அரைக்க)
  • சிறிதளவு உப்பு (அரைக்க)

செய்முறை

  1. டபுள் பீன்ஸ் விதைகளை தண்ணீரில் முதல் நாளே ஊற வைக்கவும் (20 லிருந்து 24 மணி நேரம்). தண்ணீரை வடித்துவிட்டு, பிதுக்கி மேல் தோலை எடுக்கவும்.
  2. தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக உளுந்து மாவு போல அரைக்கவும். கடைசியில் உப்பு, அரைத்த மிளகாய் விழுது சேர்க்கவும்.
  3. இதோடு நறுக்கிய வெங்காயம், வெங்காயத் தாள், தனியா சீரகப் பொடி சேர்த்து கலக்கவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து சூடாகப் பரிமாறவும்.
  4. குறிப்பு: இதை சுண்டலுக்காக உபயோகப்படுத்தும் காய்ந்த பீன்சை உபயோகப்படுத்தி செய்யவும்.