தயிர் பூரி-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

தயிர் பூரி

சைவம்

மொறுமொறுப்பான பூரிகளுக்குள் மசாலா உருளைக்கிழங்கு, கடைந்த தயிர் நிரப்பி, இனிப்பு சட்னியுடன் மசாலாத் தூள்கள் தூவி பரிமாறப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
10 நிமிடங்கள்
மொத்த நேரம்
25 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்சாட் வகைகள்

பொருட்கள்

  • பூரிகள் (பானி பூரி செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரிக்கவும்)
  • கட்டித் தயிர்
  • உப்பு, சர்க்கரை (தயிரைக் கடையச் சிறிதளவு)
  • உருளைக்கிழங்கு (வேகவைத்து கட்டிகளாக உதிர்த்தது)
  • எண்ணெய்
  • சீரகம்
  • உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம்மசாலாத் தூள்
  • வேகவைத்த பட்டாணி (அ) வெள்ளை கொண்டைக்கடலை
  • 1 டீஸ்பூன் இனிப்பு சட்னி (பானி பூரி செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளது)
  • கருப்பு உப்புத் தூள், வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்புத்தூள் (தூவ)
  • ஓமப்பொடி (மேலே தூவ)

செய்முறை

  1. பானி பூரி செய்முறையில் குறிப்பிடப்பட்ட முறையில் பூரிகள் செய்யவும். கட்டித் தயிரை சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்துக் கடையவும்.
  2. வேக வைத்து கட்டிகளாக உதிர்த்த உருளைக்கிழங்கை எண்ணெயில் சீரகம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம்மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும்.
  3. பூரியை மேலே ஓட்டை போட்டு சிறிது வதக்கிய உருளைக்கிழங்கு, வேகவைத்த பயறு அல்லது பட்டாணி (அ) வெள்ளை கொண்டைக் கடலை போடவும். பூரியின் உள்ளே ஒரு டீஸ்பூன் இனிப்பு சட்னி விடவும்.
  4. கடைந்த தயிரை உள்ளே நிரப்பவும். சிறிது கருப்பு உப்புத்தூள், வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்புத்தூள் தூவி மேலே மெல்லிய ஓமப்பொடி தூவி உடனே பரிமாறவும்.