
சைனீஸ் பொரித்த டோஸ்ட்
சைவம்பிரட் சதுரங்களின் மேல் மசாலா உருளைக்கிழங்கு-காய்கறி கலவையைப் பரப்பி ரொட்டித் தூளில் பொதிந்து மொறுமொறுப்பாக பொரிக்கப்படும் டோஸ்ட்.
- தயாரிப்பு நேரம்
- 30 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 45 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்கலப்பு உணவு
பொருட்கள்
- 1 ரொட்டி (பெரியது)
- எண்ணெய் (பொரிப்பதற்கு)
- 1/2 கிலோ வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு
- 2 டேபிள் ஸ்பூன் வினிகர்
- சீன வகை மசாலா (ஸ்பிரிங் ரோலில் கூறியுள்ளபடி தயாரிக்கவும்)
- காய்ந்த ரொட்டித் தூள் (தேவைக்கேற்ப)
- 3 டேபிள் ஸ்பூன் மைதா மாவு (சிறிது தண்ணீரில் பசைபோல குழைக்கவும்)
செய்முறை
- ரொட்டித் துண்டங்களின் ஓரங்களை கத்தரித்து விட்டு நான்கு சிறிய சதுரத்துண்டங்களாக அரியவும். ஸ்பிரிங் ரோலில் கூறியபடி மசாலா செய்து கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சூடாக இருக்கும்போதே கட்டியில்லாமல் நைசாக மசிக்கவும். இந்த மசித்த உருளைக்கிழங்கை காய்கறி மசாலாவோடு கலந்து சிறிது வினிகர், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலக்கவும்.
- ஒரு பிரட் துண்டின் மேல் சிறிது மசாலா வைத்து அதன் மேல் மைதா பசையைப் பூசி அதன் மேல் பிரட்தூள் தூவி கையால் நன்கு அமுக்கி வைக்கவும். இதை 1/2 மணி நேரம் ப்ரிஜ்ஜில் வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, காய்கறி பக்கம் அடியில் இருக்குமாறு ரொட்டித் துண்டங்களை 4 அல்லது 5 வரை எண்ணெயில் போடவும். மெதுவாகத் திருப்பிவிட்டு இரண்டாவது பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து எண்ணெயை நன்றாக வடியவிடவும்.
- சூடாகத் தக்காளி சாஸுடன் பரிமாறவும். குறிப்பு: குழிவான வாணலியை விட பீழ்ப்பாகம் அகலமாக உள்ள சாஸ் பான் இருந்தால் அல்லது ஆம்லெட் பானில் எண்ணெய் ஒரு அங்குல கனத்திற்கு விட்டு சூடாக்கி ரொட்டியைப் பொரித்தால் நன்றாக, சுலபமாக வரும்.