
வறுகடலை
சைவம்பூண்டுடன் சிறிது வேகவைத்து தோலுரித்த வேர்க்கடலையை வலைக் கூடையில் பொரித்து பளபளப்பான மொறுமொறுப்பாக்கப்படும் வறுகடலை.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 35 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்சிற்றுண்டி
பொருட்கள்
- 2 கப் உரித்த காய்ந்த வேர்க்கடலை
- 1 பல்லு பூண்டு
- உப்பு, மிளகாய்ப் பொடி (தேவைக்கேற்ப)
- எண்ணெய் (பொரிக்க)
செய்முறை
- ஒரு அகலமான பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் விட்டுச் சூடாக்கவும்.
- தண்ணீர் கொதிவரும் போது பூண்டை நசுக்கி அதில் சேர்த்து காய்ந்த கடலையை அதில் போடவும். மறுபடியும் கொதிவரும்போது அடுப்பை அணைத்து விட்டு 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- தண்ணீரை வடித்துவிட்டு ஒரு துணியை மடித்துப் போட்டு அதன் மத்தியில் இந்த கடலையைப் போட்டு துணியை மூடி உள்ளங்கையால் தேய்த்தால் தோலெல்லாம் வந்துவிடும்.
- தோலை எடுத்துவிட்டு கடலையை ஒரு தட்டில் போட்டு 2 நிமிடம் ஆற வைக்கவும்.
- ஒரு வாணலியில் பாதியளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு இரும்பு அல்லது ஸ்டீல் பிடி வைத்துள்ள பொரிக்கும் கிண்ணத்தை அதில் போட்டு அதில் கைப்பிடி அளவு கடலையைப் போட்டு பொன்னிறமாகப் பொரிக்கவும்.
- எல்லா கடலையையும் பொரித்து வடிகட்டும் கிண்ணத்தில் போட்டு எண்ணெயை வடியவிட்டதும் சூடாக இருக்கும்போதே ஒரு பேப்பரின் மேல் போட்டு உப்பு, மிளகாய்த் தூள் தூவி கலந்து ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைக்கவும் (ஒரு வாரம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம்).
- குறிப்பு: இம்முறையில் பொரித்தால் வேர்க்கடலை ருசியாகவும் மேலே பளபளவென்று பார்க்க அழகாகவும் இருக்கும்.