மக்காச்சோள சாண்ட்விச்-இன் புகைப்படம், உருகிய சீஸ் தூவப்பட்டுள்ளது

மக்காச்சோள சாண்ட்விச்

சைவம்

வதக்கிய மக்காச்சோள மணிகளை கிரீம், தழைகளுடன் கலந்து வெண்ணெய் தடவிய ரொட்டியின் மேல் சீஸுடன் பேக் செய்யப்படும் சாண்ட்விச்.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
40 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்சாண்ட்விட்ச் வகைகள்

பொருட்கள்

  • 3 மக்காச்சோளம்
  • 10 துண்டுகள் ரொட்டி
  • 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் கடைந்த பாலேடு
  • 1/4 டீஸ்பூன் கடுகுத்தூள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய புதினாத் தழை
  • 1/2 டீஸ்பூன் மிளகுப்பொடி
  • துருவிய சீஸ் (விருப்பப்படி)
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயத் தாள்
  • 1/4 டீஸ்பூன் சீன உப்பு (Aji-no-Motto)

செய்முறை

  1. மக்காச்சோளத்தை குக்கரில் தண்ணீரில் போட்டு வேக வைத்து, ஆறியபின் விதைகளை உதிர்த்து எடுக்கவும்.
  2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி சீரகம் தாளித்து, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் வெங்காயத் தாள், வேக வைத்த சோள விதைகள், சீன உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  4. கடைசியில் உப்பு, மிளகுத்தூள், புதினாத் தழை, கடுகுப் பொடி கலந்து இறக்கவும்.
  5. ஆறியதும் கடைந்த பாலேடு சேர்த்து கலக்கவும்.
  6. வெண்ணெய் தடவிய ரொட்டித் துண்டின் மேல் இக் கலவையில் சிறிது பரப்பி அதன்மேல் துருவிய சீஸை வைத்து சூடாக்கிய ஓவனில் சில நிமிடங்கள் வைத்து லேசாக நிறம் மாறியதும் பரிமாறவும்.