சைனீஸ் சிக்கன் பிரைய்
சைனீஸ் சிக்கன் பிரைய்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 1/4 தேக்கரண்டி அஜினோ மோட்டோ சால்ட்
- 1 வெட் கோழி
- 1 கப் சோயா சாஸ்
- 1/2 கப் வினிகர்
- 2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
- உப்பு, மஞ்சள்
- 2 பெல்லாரி வெங்காயம்
- 2 டீஸ்பூன் மிளகுத்தூள்
- 3 மேஜைக்கரண்டி கார்ன்பிளவர்
- 2 மேஜைக்கரண்டி மைதா
- பொரிப்பதற்கு டால்டா
செய்முறை
- கோழியை எலும்புடன் சிறு உருண்டைத் துண்டுகளாக நறுக்கி அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், சாஸ், வினிகர், அஜினோமோட்டோ சால்ட், உப்பு, மஞ்சள் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குக்கரில் அரை வேகாடு வேக வைக்கவும். பின் கார்ன் பிளவரையும் மைதா மாவையும் தண்ணீர் விட்டு கரைத்து வெந்த துண்டுகளை மட்டும் எடுத்து மாவில் தேய்த்து வாணலியில் காயும் டால்டாவில் போட்டு இரண்டிரண்டாக பொரித்து சிவந்ததும் எடுக்கவும்.