
சீன காலிப்ளவர் மஞ்சூரியன்
சைவம்வேக வைத்த காலிப்ளவரை இஞ்சி-பூண்டு-மிளகாய் விழுது, சோயா சாஸில் ஊற வைத்து மக்காச்சோள மாவில் புரட்டி மொறுமொறுப்பாக பொரிக்கப்படும் சீன பாணி மஞ்சூரியன்.
- தயாரிப்பு நேரம்
- 35 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 50 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கலப்பு உணவு
பொருட்கள்
- 1 காலிப்ளவர் (பெரியது)
- 3 டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவு (குவித்து)
- தேவையான அளவு உப்பு
- 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
- 1 டேபிள் ஸ்பூன் வோர்செஸ்டர்ஷயர் சாஸ்
- 1/2 டீஸ்பூன் அஜி-நோ-மோட்டோ
- எண்ணெய் (தேவையான அளவு)
- 1/2 டீஸ்பூன் வெள்ளை மிளகுத் தூள்
- 1 இஞ்சி (சிறிய துண்டு, அரைக்க)
- 4 பல்லு பூண்டு (அரைக்க)
- 7 பச்சை மிளகாய் (அரைக்க)
செய்முறை
- காலிப்ளவரை சிறிய பூக்களாகப் பிரித்தெடுக்கவும். கொதிக்கும் சூடு உள்ள தண்ணீரில் உப்பு சேர்த்து கழுவிய காலிப்ளவர் துண்டங்களை இரண்டு நிமிடம் போட்டு மூடி வைக்கவும்.
- தண்ணீரை நன்கு வடித்துவிட்டு துணியின் மேல்பரப்பி மீதி தண்ணீரை உறிஞ்சும்படி வைக்கவும்.
- அரைத்த விழுதோடு உப்பு, வெள்ளை மிளகுத் தூள், சாஸ் வகைகளைக் கலந்து இதை காலிப்ளவர் துண்டங்களின் மேல் நன்றாகப் பூசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பொரிப்பதற்கு முன் இதில் மக்காச்சோளமாவைத் தூவி சூடான எண்ணெயில் பொரித்து சூடாகப் பரிமாறவும்.
- மாற்று செய்முறை: இதே போல பலவித காய்கறிகளைக் கலந்தும் செய்யலாம் (கேரட், உருளைக்கிழங்கு, குடமிளகாய், கோஸ் போன்ற காய்கறிகளை உபயோகப்படுத்தவும்).