சைனீஸ் புலாவ்
சைனீஸ் புலாவ்
வகைகள்சாதம் வகை
பொருட்கள்
- 1 ஆழாக்கு பாஸ்மதி அரிசி
- 1 குடை மிளகாய்
- 1 காரட்
- 100 கிராம் பீன்ஸ்
- 100 கிராம் கோஸ் (துருவியது)
- 1 கட்டு புதினா (சிறியது)
- 5 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் வெள்ளை மிளகுபொடி
- 1 டீஸ்பூன் அஜினோ மோட்டோ
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- அரிசியை ஒன்றுக்கு இரண்டு என்கிற அளவில் நீர்விட்டு வேக வைக்கவும். சாதம் உதிராக இருக்க வேண்டும். காய்கறிகளை 1 அங்குல நீளத்திற்கு நறுக்கி, பச்சை மிளகாய் சேர்த்து முக்கால் வேக்காடாக வேகவைக்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு புதினா இலைகளை போட்டு வதக்கவும். பின்னர் காய்கறிகளை போட்டு, உப்பு சேர்த்து ஒரு தடவை புரட்டி ஆறிய சாதத்தில் கொட்டவும். அஜினோமோட்டோவும், வெள்ளை மிளகு பொடியும் சேர்த்து எல்லாற்றையும் கலக்கவும். சைனீஸ் புலாவ் ரெடி.