கோழி இறக்கைகறி மசாலா

வகைகள்கறி

பொருட்கள்

  • 5 கோழி இறக்கை கறி
  • 1 துண்டு இஞ்சி
  • 10 பல் பூண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுதூள்
  • 2 முட்டை
  • சிறிதளவு சோளமாவு
  • எண்ணெய் (பொரிக்க)
  • தேவையான அளவு உப்பு
  • வெங்காயம், தக்காளி

செய்முறை

  1. கோழி இறக்கையை சுத்தம் செய்து அதை சோளமாவில் பிரட்டி, அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து வைக்கவும். இதில் லேசாக உப்பு சேர்க்கவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். கோழி இறக்கையை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பின்பு, சிறிதளவு எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி அதனுடன் தக்காளி, மிளகு தூள், உப்பு சேர்த்து கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். பின்பு, இதில் வறுத்து வைத்துள்ள கோழி இறக்கையை போட்டு சுண்டும் வரை கொதிக்க விடவும். சூடாக பரிமாறவும்.