சிக்கன் விந்தாரி

வகைகள்கறி

பொருட்கள்

  • 1 கிலோ கோழி
  • 100 கிராம் பெல்லாரி வெங்காயம்
  • 6 கரண்டி நல்லெண்ணெய்
  • 2 தேங்காய்ச் சில்
  • 2 தேக்கரண்டி கசகசா
  • 1 அங்குலத்துண்டு இஞ்சி
  • 15 வற்றல்
  • 2 தேக்கரண்டி கொத்தமல்லி
  • 4 தேக்கரண்டி சீரகம்
  • 2 தேக்கரண்டி கடுகு
  • 1 பூண்டு

செய்முறை

  1. முதலில் வற்றல், மல்லி, சீரகம், கசகசா எல்லாவற்றையும் வறுத்து அரைக்கவும். இஞ்சி, பூண்டு தனியாகவும் தேங்காய் தனியாகவும் அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நீளமாக வெட்டிய வெங்காயத்தை வதக்கி அரைத்த இஞ்சி, பூண்டு போட்டு அரைத்த மசாலாவையும் போட்டு வாசனை வரும் வரை வதக்கி 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் கோழித்துண்டுகளை தேவையான உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு கொதிக்க விடவும். குழம்பு வற்றிச் சிவந்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.