
சில்லி சீஸ் சாண்ட்விச்
சைவம்துருவிய சீஸை வெங்காயம், பச்சை மிளகாய், வெண்ணெயுடன் கலந்து ரொட்டிக்குள் வைத்து சுடப்படும் சில்லி சீஸ் சாண்ட்விச்.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 10 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 25 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்சாண்ட்விட்ச் வகைகள்
பொருட்கள்
- 12 துண்டுகள் ரொட்டி
- 3 துண்டுகள் அமுல் சீஸ்
- 100 கிராம் அமுல் வெண்ணெய்
- 3 பச்சை மிளகாய்
- 3 டேபிள் ஸ்பூன் மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- உப்பு (விருப்பப்படி)
- 1/2 டீஸ்பூன் மிளகுப்பொடி
- 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை
செய்முறை
- ரொட்டித் துண்டங்களுக்கு வெண்ணெய் தடவவும்.
- பச்சை மிளகாயின் உள்விதையை எடுத்துவிட்டு வட்டவட்டமாக மெலிதாக அரியவும்.
- சீஸை மெல்லிய சீஸ் துருவி உபயோகப்படுத்தி மெலிதாக துருவவும்.
- இந்த துருவிய சீஸோடு நறுக்கிய வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, சிறிதளவே உப்பு, மிளகுத்தூள், பாதியளவு வெண்ணெய் சேர்த்து லேசாகக் கலக்கவும்.
- இரண்டு ரொட்டித் துண்டுகளின் மத்தியில் இக் கலவையில் 1 டேபிள் ஸ்பூன் வைக்கவும்.
- சாண்ட்விட்ச் டோஸ்டரில் (Sandwich Toaster) வைத்து இருபுறமும் சிவக்கும்படி சுட்டு எடுத்து தக்காளி சாஸ் மற்றும் புதினா சட்னியுடன் பரிமாறவும்.