சிக்கன் ஸ்டம்ப்
சிக்கன் ஸ்டம்ப்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 100 கிராம் கோதுமை மாவு
- 2 முட்டை
- 100 கிராம் கொத்திய எலும்பு நீக்கிய கறி
- 1/4 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
- 1/4 டேபிள் ஸ்பூன் அஜினோ மோடோ
- எண்ணெய் (பொரிக்க)
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- கோதுமை மாவில் முட்டையை சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சப்பாத்தியாக செய்யவும். இதன் கனம் 2 மில்லி மீட்டர் உடையதாக இருக்க வேண்டும். பின்பு, இந்த சப்பாத்தியை சதுரம் ஆக வெட்டி வைத்துக் கொள்ளவும். கோழிக்கறியுடன் அஜினோமோடோ, சோயா சாஸ், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். ஒவ்வொரு சப்பாத்தி சதுரத்தின் மீதும் கொஞ்சம் கொஞ்சம் கோழிக்கறி கலவையை வைத்து முக்கோண வடிவமாக மடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.