கோழி சூப்

வகைகள்சூப்

பொருட்கள்

  • 1 கிலோ கோழி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 அங்குலம் இஞ்சி
  • 2 தேக்கரண்டி மிளகுதூள்
  • தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள்

செய்முறை

  1. 1 கிலோ கோழி கறியை சுத்தம் செய்து, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 1 அங்குலம் இஞ்சி, 2 பெரிய வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் கோழித்துண்டுகள், நறுக்கிய இஞ்சி, வெங்காயம், 2 தேக்கரண்டி மிளகு தூள், தேவையான உப்பு, மஞ்சள் தூள் போடவும். மிதமான தீயில் வைத்து கோழிக்கறி வெந்ததும் இறக்கவும். ப்ரஷர் குக்கரில் தயாரிப்பதனால் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி விசில் சப்தம் கேட்டு 3 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.