கோழி ரோஸ்ட்

வகைகள்கறி

பொருட்கள்

  • 1/2 கிலோ கோழி
  • சிறிதளவு இஞ்சி, பூண்டு, உப்பு
  • 50 கிராம் தேங்காய் எண்ணெய்
  • 1 எலுமிச்சம்பழம்
  • 1 கரண்டி மிளகாய்தூள்
  • சிறிதளவு சிவப்பு கலர் பவுடர்
  • 2 டீஸ்பூன் தயிர்
  • 50 கிராம் நெய்

செய்முறை

  1. தோல் நீக்கிய கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். தயிரில் கோழித்துண்டு, தட்டிய பூண்டு இஞ்சி, கலர் பவுடர், எலுமிச்சம்பழ சாறு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து பின் குக்கரில் போட்டு எண்ணெய், மிளகாய்த்தூள் சேர்த்து 10 நிமிடம் குக்கரில் லேசாக வேக வைக்கவும். கோழித் துண்டுகளை தனியே எடுத்து சாறை வற்ற வைக்கவும். வெந்த கோழித் துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான கோழி ரோஸ்ட் ரெடி.