கோழி மிளகு வறுவல்
கோழி மிளகு வறுவல்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 1 கிலோ கோழி
- தேவையான அளவு உப்பு
- 3 தக்காளி
- 100 கிராம் சின்னவெங்காயம்
- 2 தேக்கரண்டி மிளகுத்தூள்
செய்முறை
- 1 கிலோ கோழியை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 100 கிராம் சின்ன வெங்காயத்தை உரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முதலில் கோழித்துண்டுகளுடன் தேவையான உப்பு சேர்த்து தடவி 1 மணி நேரம் ஊற விடவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் 50 கிராம் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி இவற்றை போட்டு வதக்கவும். வதங்கிய பின் கோழித்துண்டுகளையும் இத்துடன் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் மிளகுத்தூள் 2 தேக்கரண்டி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும். பின் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கோழித்துண்டுகள் வெந்து, நன்றாக வதங்கிய பின் இறக்கவும்.