கோழி மசாலா

வகைகள்கறி

பொருட்கள்

  • 1 கோழி
  • 1 பூண்டு
  • 1 கப் தயிர்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பெல்லாரி
  • 10 மிளகு
  • 1 எலுமிச்சம்பழம்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 ஏலக்காய்
  • 7 கிராம்பு
  • 1 பட்டை
  • 1 மேஜைக்கரண்டி கசகசா
  • 7 வற்றல்

செய்முறை

  1. கறியைப் பெரிய துண்டுகளாக வெட்டித் தயிரில் 1 மணி நேரம் ஊற வைக்கும் போது, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். பெல்லாரியை பொடியாக வெட்டி 6 கரண்டி எண்ணெயில் வதக்கி அரைத்த மசாலையும் சேர்த்து வேக வைக்கவும். வெந்தபின் எலுமிச்சம்பழம் பிழிந்து குழம்பு வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.