சிக்கன் மஞ்சூரியன்-இன் புகைப்படம், மூடி வெங்காயம்-குடைமிளகாயுடன் பரிமாறப்பட்டுள்ளது

சிக்கன் மஞ்சூரியன்

அசைவம்

மைதா-கார்ன்ப்ளவர் மாவில் தோய்த்து பொரித்த கோழித் துண்டுகளை, வெங்காயம்-பூண்டு-குடைமிளகாய் வதக்கி சோயா சாஸ், வினிகர் சேர்த்த காரம் கலந்த கிரேவியில் கலந்து தயாரிக்கப்படும் இந்தோ-சீன பாணி சிக்கன் மஞ்சூரியன்.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
30 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்கறி

பொருட்கள்

  • 450 கிராம் எலும்பு நீக்கிய கோழி துண்டுகள் (1 அங்குல அளவு துண்டுகளாக வெட்டியது)
  • 115 கிராம் மைதா மாவு (மாவுக்கு)
  • 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் (மாவுக்கு)
  • ½ டீஸ்பூன் மிளகு தூள் (மாவுக்கு)
  • 50 கிராம் கார்ன் ப்ளவர் (மாவுக்கு)
  • 1 முட்டை (மாவுக்கு)
  • தேவையான அளவு உப்பு (மாவுக்கு)
  • தேவையான அளவு தண்ணீர் (மாவு கரைக்க)
  • 2 மேஜைக்கரண்டி எண்ணெய் (கிரேவிக்கு, தவிர பொரிக்க தேவையான அளவு)
  • 30 கிராம் வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
  • 75 கிராம் பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)
  • 50 கிராம் பூண்டு (பொடியாக நறுக்கியது)
  • 30 கிராம் குடைமிளகாய் (பொடியாக நறுக்கியது)
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • ¼ டீஸ்பூன் வினிகர்
  • ½ டீஸ்பூன் அஜினிமோட்டோ
  • சிறிதளவு ஸ்டாக்
  • 1 டீஸ்பூன் கார்ன் ப்ளவர் (கரைத்து ஊற்ற, கிரேவிக்கு)

செய்முறை

  1. மேலே கொடுக்கப்பட்டுள்ள மாவுகளை சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு அதில் கறி துண்டுகளை ஒவ்வொன்றாக தோய்த்து காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுத்து வைக்கவும்.
  2. ஒரு வாணலியில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக வெட்டிய வெங்காயம், மிளகாய், பூண்டு, குடைமிளகாய் எல்லாவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும்.
  3. அதனுடன் சோயா சாஸ், வினிகர், அஜினிமோட்டோ சேர்த்து சிறிது ஸ்டாக் ஊற்றி தேவையான உப்பும், கார்ன் ப்ளவர் கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  4. எல்லாம் சேர்த்து கட்டியாக வந்த பின் தனியாக பொரித்து வைத்திருக்கும் கறி துண்டுகளை அதனுடன் கலந்து உபயோகிக்கவும்.
  5. குறிப்பு: ப்ராய்லர் கோழிதான் உபயோகிக்க வேண்டும். மற்ற கோழியாக இருந்தால் கறியை சிறிது வேக வைக்க வேண்டும்.