கோழி சாப்ஸின் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

கோழி சாப்ஸ்

அசைவம்

இஞ்சி-பச்சை மிளகாய் விழுதில் ஊறவைத்த கோழியை மென்மையாகும் வரை குக்கரில் வேகவைக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
25 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 1 கிலோ கோழி
  • 10 பச்சை மிளகாய்
  • 2 அங்குலம் இஞ்சி
  • 1 பெரிய மிளகாய்
  • 3 முட்டை
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  1. 1 கிலோ கோழியை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 2 அங்குலம் இஞ்சி, 10 பச்சை மிளகாய்கள், 1 பெரிய மிளகாய், இவற்றை அரைத்துக்கொள்ளவும். கோழிக்கறித் துண்டுகளுடன் அரைத்த மசாலா, தேவையான உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும். ப்ரஷர் குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதன் மீது பிசிறி வைத்துள்ள கோழிக்கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தை வைத்து மூடி, குக்கரின் மூடியையும் மூடவும். வெயிட் வைக்கவும். விசில் சப்தம் கேட்டதும் இறக்கவும். குக்கர் திறந்த வந்த பின், கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தை வெளியே எடுத்துக்கொள்ளவும். 3 முட்டைகளை தேவையான உப்பு கலந்து நன்கு நுரைக்க அடித்துக்கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் 100 கிராம் ஊற்றி, காய்ந்ததும், தீயை மிதமாக்கவும். கோழிக்கறித்துண்டுகளை ஒவ்வொன்றாக அடித்து வைத்துள்ள முட்டைக்கலவையில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ஒரு தடவைக்கு 6 துண்டுகள் வீதம் போட்டு பொரிக்கலாம்.