
சிக்கன் சில்லி பிரைய்
அசைவம்மிளகாய்-பூண்டு-வினிகர் விழுதில் ஊறவைத்து ஆவியில் வேகவைத்த கோழியை பழுப்பேற்றிய வெங்காயம், தக்காளியுடன் வறுக்கப்படும்.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 30 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 50 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- கடினம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 1 கிலோ கோழி
- 6 அல்லது 7 வற்றல் (விதை நீக்கியது)
- 1/2 கிலோ பெல்லாரி
- 3 தக்காளிப்பழம்
- 3/4 கப் டால்டா அல்லது நெய்
- 1 பூண்டு
- 1 வினிகர்
- தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள்
செய்முறை
- கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வற்றல், பூண்டை வினிகர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும். கறியுடன் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் கறியை இட்லித் தட்டில் ஆவியில் நன்றாக வேக வைக்கவும். வெங்காயத்தை பொடியாக வெட்டி நெய்யில் போட்டு பிரௌன் கலராக பொரித்து எடுத்து வைக்கவும். பின் கறியை நெய்யில் பிரௌன் கலர் ஆகும் வரை பொரிக்கவும். அத்துடன் வதக்கிய வெங்காயம், தகடாக வெட்டிய தக்காளி துண்டுகளையும் சேர்த்து பரிமாறவும்.