கோழிக்கறி ரசம்

வகைகள்சூப்

பொருட்கள்

  • கோழிக்கறி குழம்பிலுள்ள ஈரல்
  • எலுமிச்சையளவு புளி
  • 5 வற்றல்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • மல்லிச்செடி (தூவி)
  • கருவேப்பிலை, கடுகு, வெந்தயம்

செய்முறை

  1. அரை லிட்டர் தண்ணீரில் புளியைக் கரைத்து வைக்கவும். வற்றல், சீரகம் அரைத்து அதில் கரைத்து மல்லிச்செடி தூவி, 1 தேக்கரண்டி எண்ணெயைக் காயவைத்து கடுகு, வெந்தயம், கருவேப்பிலை போட்டுத் தாளித்து ஊற்றிக் கொதிக்க விடவும். கடைசியாக தயாரித்து வைத்திருக்கும் கோழிக் குழம்பிலுள்ள சிறிது குழம்பையும் அதிலுள்ள ஈரலையும் ரசத்தில் விட்டு உப்பு சேர்த்து இறக்கவும்.