கோழி பஜ்ஜி
கோழி பஜ்ஜி
வகைகள்பஜ்ஜி
பொருட்கள்
- 200 கிராம் (பாக்) காக் பிராண்ட் பஜ்ஜி மாவு
- 2 டீஸ்பூன் மிளகாய்தூள்
- சிறிதளவு உப்பு
- 500 கிராம் நெஞ்சுக்கறி கோழி
- 200 மி.லி எண்ணெய்
செய்முறை
- கோழிக்கறியை விரல் நீள துண்டுகளாக வெட்டி கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து சிறிது உப்பு மிளகாய் தூள் தூவி ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து (பஜ்ஜி மாவில் கரைத்துக் கொள்ளவும்.) கரைத்தமாவில் கோழிக்கறி துண்டுகள் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இது சுவையாக இருக்கும். குறிப்பு: ப்ராய்லர் கோழிதான் உபயோகிக்க வேண்டும். மற்ற கோழியாக இருந்தால் கறியை சிறிது வேக வைக்க வேண்டும்.