சீஸ் போண்டா-இன் புகைப்படம், வெட்டி வைக்கப்பட்டுள்ளது, உள்ளே உருகிய சீஸ் தெரியும்

சீஸ் போண்டா

சைவம்

துருவிய சீஸ், முந்திரியுடன் கலந்த மைதா மாவை உடனடியாக பொன்னிறமாக பொரிக்கப்படும் விரைவு போண்டா.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
30 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்பொண்டா வகைகள்

பொருட்கள்

  • 1 கப் மைதா
  • 1/2 கப் சீஸ் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய முந்திரிப் பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலைத் தழை
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • தண்ணீர் (மாவைப் பிசைவதற்குத் தேவையான அளவு)
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)

செய்முறை

  1. சலித்த மைதா மாவோடு மெலிதாகத் துருவிய சீஸ் மற்றும் கூறப்பட்டுள்ள பொருட்களைக் கலந்து தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் போண்டா மாவு போல பிசையவும் (லேசாக கலக்கவும், அழுத்திப் பிசைய வேண்டாம்).
  2. மாவைக் கலந்த உடனேயே சூடான எண்ணெயில் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும். சூடாக உடனே பரிமாறவும்.
  3. மாற்று செய்முறை -- பிரட் சீஸ் போண்டா: பிரட் துண்டங்களை பெரிதாகப் பிய்த்து மிக்ஸியில் போட்டு பொடி போல செய்யவும். இதோடு பால், சீஸ், சிறிதளவு மைதா, உப்பு, பேகிங் பவுடர், பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை கலந்து போண்டா போடலாம்.
  4. குறிப்பு: இதற்கு முடிந்தவரை Cheddar Cheese எனப்படும் Cooking Cheese ஐ உபயோகப்படுத்தவும். மாவை அதிக நேரம் வைத்திருந்து போட்டால் நன்றாக வராது, உடனே உபயோகப்படுத்திவிடவும்.