
சீஸ் கட்லெட்
சைவம்மசித்த உருளைக்கிழங்கை முட்டைக்கோஸ், குடமிளகாய், வெங்காயத்துடன் வதக்கி துருவிய சீஸுடன் கலந்து தோசைக்கல்லில் பொன்னிறமாக சுடப்படும் கட்லெட்.
- தயாரிப்பு நேரம்
- 30 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 50 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கட்லெட் வகைகள்
பொருட்கள்
- 1/2 கிலோ உருளைக்கிழங்கு
- 2 வெங்காயம்
- 2 குடமிளகாய்
- 150 கிராம் முட்டைக்கோஸ்
- 7 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
- 1/2 கப் துருவிய சீஸ் (3 க்யூப்கள்)
- தேவைக்கேற்ப பொடி உப்பு
- 1/2 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
- எண்ணெய் (சுடுவதற்கு)
- 1/2 கப் காய்ந்த ரொட்டித்தூள் (அ) ரஸ்க் தூள்
- 3 டேபிள் ஸ்பூன் மைதா
செய்முறை
- உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசிக்கவும். வெங்காயத்தையும், முட்டைக் கோஸையும் துருவவும். பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். குடமிளகாயை பொடியாக அரியவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு அல்லது சீரகம் தாளித்து இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் விழுது சேர்த்து கடைசியில் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் லேசான பிங்க் நிறமாக மாறியதும் துருவிய கோஸ், அரிந்த குடமிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.
- காய்கறிகள் வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, கரம்மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக ஆறவிடவும்.
- ஆறிய பிறகு மெலிதாகத் துருவிய சீஸ் மற்றும் பாதி ரொட்டித் தூள் சேர்க்கவும். நன்றாகக் கலந்து எலுமிச்சையளவு உருண்டைகள் செய்யவும்.
- மைதாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கூழ் போலாக்கி அதில் இந்த உருண்டைகளை முக்கி, பிரட் தூளில் புரட்டி எடுத்து கைகளினால் தட்டி வட்ட வடிவமாக்கவும். விருப்பப்பட்டால் பிஸ்கட் கட்டர் உபயோகப்படுத்தி பலவித ஷேப்புகளில் சிறிய சிறிய கட்லெட் செய்யவும்.
- 1/2 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து தோசைக்கல்லில் அதிக எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுடவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.