பிரட் பக்கோடா-இன் புகைப்படம், தக்காளி கெட்ச்அப்புடன் பரிமாறப்பட்டுள்ளது

பிரட் பக்கோடா

சைவம்

மோரில் ஊறிய ரொட்டித் தூளை நெய் தேய்த்த மாவு, வெங்காயம், தழைகளுடன் கலந்து மென்மையான பக்கோடாவாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
40 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்பஜ்ஜி

பொருட்கள்

  • 1/4 கப் கடலை மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 2 வெங்காயம்
  • 2 டீஸ்பூன் நெய்
  • 1 சிட்டிகை சமையல் சோடா
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய புதினாத் தழை
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 8 முந்திரி
  • 8 ரொட்டி துண்டுகள்
  • 2 டீஸ்பூன் புளித்த மோர்
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • ருசிக்கேற்ப உப்பு

செய்முறை

  1. வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் நீளவாக்கில் அரியவும்.
  2. பிரட் துண்டங்களின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு மத்தியில் உள்ளதை பெரிதாகப் பிய்த்து மிக்ஸியில் போட்டு (Dry grinding blade) ஒரு தடவை திருப்பினால் பொடியாகி விடும்.
  3. இந்த பிரட் தூளை ஒரு கிண்ணத்தில் போட்டு புளித்த மோர் 2 ஸ்பூனை தெளித்து, கலந்து 1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  4. வேறு ஒரு அகலமான பேசினில் நெய்யையும், சோடாவையும் சேர்த்து விரல்களால் நன்கு குழைக்கவும்.
  5. இதோடு மாவு வகைகளை முதலில் கலந்து விட்டு மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  6. தண்ணீர் தெளிக்காமலே கைகளினால் உருண்டை பிடிக்கும் பக்குவம் வந்தால் தண்ணீர் தெளிக்க வேண்டாம். இல்லாவிடில் சிறிதளவே தண்ணீர் தெளித்து பிசறிவிட்டு சூடான எண்ணெயில் மற்ற பக்கோடாக்களை பொரிப்பது போல போட்டு எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.