பிரட் ரோல்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

பிரட் ரோல்

சைவம்

ஓரம் நீக்கிய பிரட் துண்டுகளுக்குள் மசாலா கலந்த கலவை காய்கறி-உருளைக்கிழங்கு பூரணத்தை சுருட்டி குழல் வடிவில் பொரிக்கப்படும் ரோல்.

தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்ரோல் வகைகள்

பொருட்கள்

  • 1 ரொட்டி (முழு ரொட்டி)
  • எண்ணெய் (பொரிப்பதற்கு)
  • 1/4 கிலோ வேகவைத்த உருளைக்கிழங்கு
  • 1/2 கப் வேகவைத்த பட்டாணி
  • 1 1/2 கப் பொடியாக நறுக்கிய வேகவைத்த காய்கறிகள் (காரட், பீன்ஸ், காலிபிளவர்)
  • 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
  • 1/4 கப் நறுக்கிய குடமிளகாய்
  • 1 1/2 டீஸ்பூன் இஞ்சி பச்சை மிளகாய் விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய் பொடி
  • 1/2 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை
  • 1 எலுமிச்சம் பழம்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி வெங்காயம், குடமிளகாய், இஞ்சி மிளகாய் விழுது சேர்த்து சிவக்க வதக்கவும். வதங்கியதும் வேகவைத்து தண்ணீர் வடித்த காய்கறிகள், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலாத் தூள் சேர்த்து கிளறவும். கடைசியில் எலுமிச்சம் பழம் பிழிந்து கொத்தமல்லித் தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  3. முதல் நாள் வாங்கிய பிரட் துண்டங்களை எடுத்து ஒவ்வொன்றாக ஓரங்களை வெட்டி எடுத்துவிடவும்.
  4. ஒரு அகலக் கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஸ்லைசாக அதில் முக்கி உடனே எடுத்து உள்ளங்கை அகலமாக வைத்து மேலே இன்னொரு கையால் அமுக்கி அதிகத் தண்ணீரை எடுத்துவிட்டு மத்தியில் சிறிதளவு மசாலாவை நீளவாக்கில் ஒரு ஓரத்தில் வைத்து பாய் போல சுருட்டவும். பிறகு கைகளால் நன்றாக குழல் போல உருட்டவும். மசாலா வெளியில் வராதபடி உருட்டி வைக்கவும்.
  5. இதேபோல எல்லா பிரட் துண்டங்களையும் செய்து குளிர்சாதனப் பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும். பரிமாறுவதற்கு சற்று முன் சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.