பிரட் தங்க வறுவல்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

பிரட் தங்க வறுவல்

சைவம்

பிரட் சதுரங்களை மசாலா கடலைமாவு-அரிசிமாவு மாவில் தோய்த்து தோசைக்கல்லில் பொன்னிறமாக பொரிக்கப்படும் வறுவல்.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
30 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 6 ரொட்டி துண்டுகள்
  • 1/4 கப் கடலை மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
  • 1/2 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • 3 டேபிள் ஸ்பூன் வெங்காயத் துருவல்
  • 3 பச்சை மிளகாய் (அரைக்க)
  • 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித் தழை (அரைக்க)
  • சிட்டிகை உப்பு (அரைக்க)
  • 1 இஞ்சி (சிறிய துண்டு, அரைக்க)

செய்முறை

  1. ரொட்டித் துண்டங்களை நான்காக சதுர வடிவில் வெட்டவும்.
  2. அரைத்த விழுதோடு துருவிய வெங்காயம், பொடி வகைகள், உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைக்கவும்.
  3. பிரட் துண்டங்களை இதில் இருபுறமும் முக்கி எடுத்து தோசைக் கல்லில் அதிக எண்ணெய் விட்டு சுடவும்.
  4. குழந்தைகளுக்கான சாயந்திர டிபனாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.