
திடீர் பிரட் தயிர்வடை
சைவம்பிய்த்த ரொட்டியை மென்மையான மாவாக பிசைந்து வடை வடிவில் வைத்து இனிப்பு தயிர், மசாலா தூவி உடனடியாக தயாரிக்கப்படும் திடீர் பிரட் தயிர்வடை.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 15 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்வடை சமையல் குறிப்புகள்
பொருட்கள்
- 12 துண்டுகள் ரொட்டி
- 1/4 கப் பால்
- தேவைக்கேற்ப உப்பு
- 1/2 டீஸ்பூன் சர்க்கரை
- 1 கப் கெட்டியான தயிர்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
- 2 டேபிள் ஸ்பூன் இனிப்பு சட்னி (பானிபூரி செய்முறைக் குறிப்பில் உள்ளது)
- 1 1/2 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடி
- 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை
- 1/2 டீஸ்பூன் கருப்பு உப்பு
செய்முறை
- ரொட்டித் துண்டங்களின் ஓரங்களை கத்தரித்து விடவும்.
- ரொட்டியைப் பிய்த்து சிறிதளவு பால் தெளித்து மிருதுவான மாவாக பிசையவும் (அதிகம் பிசைய வேண்டாம்).
- இந்த மாவை சிறு எலுமிச்சையளவு உருண்டை செய்து வடை போல தட்டி ஒரு அகலத்தட்டில் மத்தியில் இடமிருக்கும்படி வைக்கவும்.
- கெட்டியான தயிரை (புளிக்கக் கூடாது) லேசாகக் கடைந்து சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
- பரிமாறுவதற்கு முன்பு இந்த தயிரை பிரட் வடையின் மேலே ஊற்றவும்.
- அதற்கு மேலே கருப்பு உப்புத் தூள், உப்பு, சீரகத் தூள், மிளகாய்த் தூள் தூவவும். கொத்தமல்லித் தழை அலங்கரித்து அதற்கும் மேலே சிறிதளவு இனிப்புச் சட்னியை ஊற்றி பரிமாறவும்.
- குறிப்பு: திடீர் விருந்தாளிகள் வந்து விட்டால் இந்த வடையை சில நிமிடங்களில் செய்யலாம். மிகவும் சுவையாகவும் இருக்கும்.